மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு...! சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி
மோசடியாக முறையில் கார் ஒன்றைக் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண் காவல்துறை அதிகாரியான வருணி போகஹவத்த என்பவரே இவ்வாறு விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.
வருணி போகஹவத்த முன்னர் கொழும்பு, காவல்துறை தலைமையகத்தில் மகளிர் மற்றும் சிறுவர் காவல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார்.
தெளிவான ஆதாரங்கள்
தற்போது மாத்தறை கொட்டவில காவல் நிலையத்தில் நிர்வாக பொறுப்பதிகாரியாக அவர் கடமையாற்றுகின்றார்.
இந்நிலையில் அவரது காருக்கு செலுத்த வேண்டிய லீசிங் தவணைக் கட்டணத்தை ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபரொருவர் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து வருணி போகஹவத்தையின் கார் தற்போது காவல்துறை நிதிமோசடிப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காரைக் கொள்வனவு செய்வதற்கான வருமான மூலங்கள் குறித்து அவர் தெளிவான ஆதாரங்களை முன்வைக்காத நிலையில் அது தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |