நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவை : அரச ஊழியர்களுக்கு வெளியான தகவல்
Jaffna
Government Employee
By Theepan
நெடுந்தீவுக்கான அரச கடற் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (22/06) தொடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒவ்வொரு திங்களும் நெடுந்தீவில் இருந்து காலை 6.15 மணி , காலை 6.45 மணி ஆகிய நேரங்களில் குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 7.30 மணி, காலை 8.30 மணி ஆகிய நேரங்களில் நெடுநதீவை நோக்கிச் செல்ல ஏற்பாடாகியுள்ளதுடன் மாலைநேர சேவையில் தேவையேற்படின் மேலதிக அரச படகுகளை சேவையில் ஈடுபடுத்தவும் ஏற்பாடாகியுள்ளது.
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான சேவை
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள வடதாரகை , நெடுந்தாரகை என்பன திருத்தவேலைகள் முடிந்து தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்