நடுக்கடலில் பயணிகள் படகில் பற்றியது தீ -120 பேரின் நிலை என்ன..!
Philippines
Fire
By Sumithiran
பிலிப்பைன்சில் பயணிகள் சென்ற படகு திடீரென தீ பற்றியதில் பலர் உயிரை காப்பாற்ற கடலில் குதித்ததால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு இன்று பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
திடீரென பற்றிய தீ
படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சித்தனர்.
மீட்புப்படையினர் விரைவு
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 120 பேர் பயணித்த படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகளின் நிலை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
