உர இறக்குமதி விவகாரம் : நீதிமன்றத்தை நாடிய முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி இன்று (14) குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அதன்படி, இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அழைப்பாணை விடுத்துள்ளார்.
இதேவேளை தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு (Keheliya Rambukwella) எதிரான வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
