விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்
நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 157 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது.
சிறுபோக உர மானியத் திட்டத்தின் கீழ் குறித்த பணம் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ச (Rohana Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறுபோகத்திற்கான உர மானியங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும்.
உர மானியம் ரூபா 20 வீதம் வழங்கப்படுகிறது. 2 ஏக்கர் வரம்பிற்கு உட்பட்டு, ஒரு ஏக்கருக்கு நெல்லுக்கு 25,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மானியம் வழங்கும் நடவடிக்கைக்காக 157 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
