புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
புதிய இணைப்பு
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 வீதமாக அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது.
உலக சந்தையின் இந்த விலை அதிகரிப்பு இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்து 277,000 ரூபாவாக விற்பனையாகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலை இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60,000 ரூபா வரை அதிகரித்துள்ளாதாக தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,000 அமெரிக்க டொலர்களாக (USD) உயரக்கூடும் என சபை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விடயங்களை தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
அவுன்ஸ் தங்கத்தின் விலை
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபா அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60,000 ரூபா வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக இருப்பது உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைய வேண்டுமெனில் மத்திய வங்கி தங்க இருப்புக்களை வெளியிட வேண்டும் என்றும் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார வேண்டுகொள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
