விவசாயிகளுக்கு வெளியான மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்
நெல் விலையில் மீண்டும் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (20) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நெல் கிடங்குகள் புனரமைக்கப்பட்டு, நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நியாயமான விலை
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “விவசாயிகள் இனிமேல் தங்கள் அறுவடை விற்க முடியாமல், குப்பைக்கு போய்விட்டது என்று முறைப்பாடு செய்ய முடியாது.
விலைகளை நிலைப்படுத்த அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது, நெல் விலை குறைந்தால், நாங்கள் அதை வாங்குவோம்.
விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல் விலையை நிலையாக வைத்திருப்பதே எங்கள் நோக்கம், தற்போது அது வெற்றி பெற்றுள்ளது.
எங்கள் விவசாயப் பொருட்களை மீண்டும் ஒரு முறை கூட அற்ப விலைக்கு விற்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
