விவசாயிகளுக்கு உர மானியம்: வெளியானது மகிழ்ச்சி தகவல்
தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பணி மார்ச் 30 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டன் MOP உரத்தை எப்பாவல ராக் பாஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்து, தேங்காய் பயிர் செய்கைக்காக 56,700 மெட்ரிக் டன் சிறப்பு AMP தேங்காய் உரத்தைத் தயாரிக்க அரச உர நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.
நிவாரண விலை
இந்த உரத்தை மானிய விலையில் வழங்கவும் விநியோகிக்கவும் தேவையான பணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபையும் அரச உர நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன கூறுகையில், “ சந்தையில் ரூ.9000 விலைக்கு வாங்கப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையை ரூ.4000 நிவாரண விலையில் வழங்க இம்மாதம் 30 திகதியில் இருந்து வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஹந்தபனகல தென்னை தோட்ட நாற்றங்கால் வளாகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”
விண்ணப்பப் படிவம்
என்றார். அதன்படி, இந்த மானியத்தைப் பெற, தென்னை விவசாயிகள் தென்னை பயிர்ச்செய்கை சபையால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் உத்தியோகபூர்வ வலைத்தளமான https://coconutsrilanka.lk இல் இருந்து பெறலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
