விவசாயிகளுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
எதிர்வரும் சிறுபோகத்தின் போது வயல் நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
சிறு போகத்திற்கு அவசியமான உர விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06.03.2025) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நடவடிக்கை
சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்
சிறு போக நெற்பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், தடையின்றி விவசாயிகளுக்கு சிறு போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
