அரசு அலுவலகத்தை துவம்சம் செய்தவர் கைது! வெளியானது சம்பவத்திற்கான காரணம்
புதிய இணைப்பு
அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தை நபர் ஒருவர் அடித்து நொறுக்கியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 4 ஆம் திகதி தனது தந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெறுவதற்காக பிரதேச செயலகத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக சந்தேகநபர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த நபர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, அம்பாந்தோட்டை, கொன்னொருவ, 5 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு வந்த ஒருவர் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தான் செய்ய வந்த பணி முழுமையடையாததால் கோபத்தில் அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில், அங்கிருந்த அரசு அதிகாரிகள் குறித்த நபரின் தாக்குதல்களுக்கு பயந்து, அலறி அடித்து ஓடும் காட்சிகளும் காணொளியில் பதிவாகியுள்ளது.
அதன்போது, கலவரக்காரர் கதிரையொன்றை எடுத்து அலுவலக கண்ணாடிகள் அனைத்தையும் நொறுக்குவதும் கணொளியில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அரசு ஊழியர்கள் சிலர் குறித்த நபரை பிடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் போது, அவர்களையும் தாக்குவதற்கு சந்தேகநபர் முனைகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
