யாழில் உண்ணிகாய்ச்சல் - முதியவரை பலியெடுத்தது
jaffna
fever
elderly woman death
By Sumithiran
யாழில் பரவிய உண்ணி காய்ச்சல் காரணமாக முதியவரான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் இன்று உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தவராவார். கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி