கடுமையான வறட்சியினால் விவசாய அமைச்சரின் வயலும் பாதிப்பு!
Mahinda Amaraweera
Sri Lanka
Climate Change
By Sathangani
நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வறட்சியினால் விவசாய அமைச்சரின் நெல் வயலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் காணப்படும் இரண்டு ஏக்கர் நெல் வயல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமனலவெவ நீர் நிலையிலிருந்து நீர் விநியோகம் செய்யப்பட்டாலும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதிக்கு நீர் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனது வயல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட போதிலும் அதனை எரிக்கவில்லை எனவும், மாடுகளுக்கு உணவாக அதனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை காலை நேர செய்திகளில் காண்க