வயல் வேலையில் ஈடுபட்டவர் மின்னல் தாக்கிப் பலி - தொடரும் எச்சரிக்கை
Death
Thirukkovil
lightning
SriLanka
Amaparai
By Chanakyan
வயல் காணியில் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை - திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் திருகோவில் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போது பருவகால நிலை ஆரம்பித்துள்ளது. இதனால் வயல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மய்சரிவு எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.