நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள்!
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடங்களாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசியலமைப்பு சபைக்கும் இடையில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
அதாவது நீதியரசர் புவனேக அலுவிஹாரே ஓய்வின் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காகவே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
மேலும், நீதியரசர் நிஸ்ஸங்க கருணாரத்ன உயர்நீதிமன்ற நீதியரசராக பதவியுயர்வு பெற்றதனால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணாவை நியமிக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை, சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, அதிபரின், பரிந்துரை குறித்து முடிவு செய்யவில்லை எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த நவம்பர் 14ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்குப் அதிபரால் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசர்கள் தொடர்பில் தனது கருத்துக்களைக் கோரி எழுதிய கடிதம், அதிபர் ரணிலிற்கு பதவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்