உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டி - மூன்றாவது இடத்தை பெற்றது குரோஷியா
கட்டாரில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ணஉதைபந்தாட்டப் போட்டியில் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா அணி மொராக்கோ அணியை 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் ஆவது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ வார்டியோல் தனது அணிக்கான முதல் கோலை அடித்த நிலையில் மொரோக்கோ அணி வீரர் அஷ்ரப் டேரி ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் கோல் அடித்திருந்தார்.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.
முதல் பாதி
இதன்முலம் ஆட்டத்தில் முதல் பாதியில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்ததால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி 3ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இறுதிப்போட்டி
நாளை பிரான்சுக்கும் ஆர்ஜென்டினாவுக்கும் இடையில் இறுதிப்போட்டி
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

