15 வயது சிறுமி மாயம்! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
பண்டாரகம, கங்கமுவ பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 15 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பண்டாரகம காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சிறுமியின் தாயார் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பண்டாரகம காவல் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடளித்துள்ளார்.
அதில் சிறுமி தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதன் பின்னர் திரும்பி வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் புகைப்படம்
இந்த நிலையில், காணாமல் போன சிறுமியின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பண்டாரகம காவல்துறையின் பொறுப்பதிகாரியை (OIC) 071-8591681 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பண்டாரகம காவல் நிலையத்தை 038-2290222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |