தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றையதினம் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் மண்டைதீவு பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமுற்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த நே.சர்வேந்திரன் வயது (45) என்பவரே படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத போதும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23.07.2025) நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பின்பு, விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
