உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..
2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் உலகின் பாதுகாப்பான நாடாக அன்டோரா (Andorra) பெயரிடப்பட்டுள்ளது.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) குறித்த நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
வலுவான பாதுகாப்பு நாடுகள்
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் வலுவான பாதுகாப்பு உட்கட்டமைப்பு கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை இந்தப் பட்டியலில் இலங்கை 59 ஆவது இடத்தில் உள்ளதுடன் இந்தியா 66வது இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் இறுதி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுவேலா உள்ளது.
பாதுகாப்பு குறைந்த நாடுகள்
மோசமான பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் வெனிசுவேலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக பாதுகாப்பு பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பயன்படுத்தி நம்பியோ குறியீட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்