பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புதல் : பிரதமரின் அறிவிப்பு
நாட்டில் நிலவும் பாடசாலை அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவும், அதிபர் சேவையை வலுப்படுத்தவும் முறையான ஒரு நியமன முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் அதிபர்கள் சேவைச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் நேற்று (27) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு, முறையான ஒரு பொறிமுறையின் ஊடாக அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சம்பள முரண்பாடு
புதிய கல்விச் சீர்திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு, கல்வித் துறைசார் நிபுணர்களுக்குத் திருப்திகரமான மற்றும் ஆதரவான பணிச்சூழலை உருவாக்குவது அவசியம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிபர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நீண்டகாலமாக நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது குறித்து பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவை திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |