இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Rajapaksa Family Suresh Salley
By Independent Writer Feb 28, 2026 03:20 AM GMT
Report
Courtesy: பிரியங்கன்

இலங்கை அரசியல் வரலாற்றை குருதிக் கறையால் எழுதிய 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு இன்று வரை ஒரு பெருந்துயராகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் அது வெறும் மதத் தீவிரவாதத்தின் விளைவு என கூறி தம்மை தற்காத்துக்கொள்ள ஒரு பெரும் இரகசிய சதி நகர்வு நகர்த்தப்பட்டது.

உண்மையில் அது மதவாதத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, பின்புலத்தில் ஒரு சர்வதேச அரசியல் சதுரங்க காய் நகர்த்தல் இருந்தது என்பது இப்போது அடுக்கடுக்கான ஆதாரங்கள் மூலமாக அம்பலமாகி வருகிறது.

இந்தச் சதிநடவடிக்கையின் மூளை என கருதப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவருக்குப் பின்னால் இருந்த ராஜபக்சக்களின் அதிகாரத் தாகம் இவற்றோடு பலரும் அறியாத இன்னுமொரு இரும்புக்கரமென்றின் பங்குபற்றியும் இடைக்கிடை பேசப்படுகிறது.

அது சிறிலங்காவின் மிகநெருங்கிய ராஜதந்திர பங்காளரான ஒரு அயல்நாட்டின் புலனாய்வுப்பிரிவு என வெளியாகும் சில இரகசியங்களால் இப்போது உலக அரசியல் அரங்கில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் பிடியில் வெனிசுலா எண்ணெய் வருவாய்: ட்ரம்பின் இலக்கை எட்டிய விற்பனை

அமெரிக்காவின் பிடியில் வெனிசுலா எண்ணெய் வருவாய்: ட்ரம்பின் இலக்கை எட்டிய விற்பனை

சுரேஷ் சலே ராஜபக்சக்களின் நிழல் தளபதி

சிறிலங்காவின் இராணுவப்புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே என்ற நபர் வெறும் இராணுவ அதிகாரி மட்டுமல்ல அவரே ராஜபக்ச குடும்பத்தின், மிகக்குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருங்கிய நம்பிக்கைக்கு பாத்திரமான ஏவலாளியுமாவார்.

கடந்த 2019ல் அப்போதைய மைத்திரி - ரணில் கூட்டின் நல்லாட்சி என்று சொல்லிக்கொண்ட அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் இருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்க ஒரு இரும்புக்கரம் கொண்ட தலைவர் ஒருவர் தேவை என்ற பிம்பத்தை உருவாக்க ராஜபக்சக்களுக்கு ஒரு பாரிய சதி நடவடிக்கை அல்லது அதற்கு மேலான ஒன்று தேவைப்பட்டது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம் | 2019 Easter Attack In Sl Suresh Sallay Arrested

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்திற்கமைய இந்த சுரேஷ் சலே தாக்குதல் இடம்பெற முன்பிருந்தே தற்கொலைதாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தாகவும் இந்தத் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் முன்கூட்டியே கிடைத்தும் அவை திட்டமிட்டே கண்டுகொள்ளப்படவில்லை அல்லது உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என பதிவாகிறது.

ராஜபக்சக்களை மீண்டும் நாட்டின் அரியணையில் ஏற்ற உருவாக்கப்பட்ட ஒரு 'உள்வீட்டுச் சதி' என்பதற்கு, கோட்டாபய ஆட்சிக்கு வந்தவுடன் வழமையான பதவி உயர்வு படிமுறைகளுக்கு மாறாக சுரேஷ் சலேவுக்கு பதவி உயர்வு வழங்கிய ஒன்றையே போதுமான சாட்சியாக பதிவுசெய்ய முடியும்.

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 6 பேர் கைது...!

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 6 பேர் கைது...!

தாஜ் சமுத்ரா மர்மம்

இது இப்படி இருக்க இந்த உள்வீட்டுசதியின் பின்புலத்தில் அயல் நாடொன்றின் கரம் இணைந்திருப்பதான சந்தேகங்களும் கேள்விகளும் கொழும்பின் 'தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்திலிருந்து ஆரம்பமாகிறது.

சிறிலங்கா தலைநகரில் ஏனைய நட்சத்திர விடுதிகளில் தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்கச்செய்தபோது தாஜ் சமுத்ரா'வில் மட்டும் குண்டுதாரி அப்துல் லத்தீப் ஜமீல் குண்டை வெடிக்கச் செய்யாமல் வெளியேறியது ஒரு திட்டமிடப்பட்ட நகர்வு என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம் | 2019 Easter Attack In Sl Suresh Sallay Arrested 

அங்கு தங்கியிருந்த ஒரு முக்கியமான 'இந்தியப் பிரஜையை'க் காப்பாற்றும் பொருட்டு, இறுதிநேரத்தில் கட்டளை மீளப்பெறப்பட்டதாகவும் சுரேஷ் சலே அதனை அறிவுறுத்தியதாகவும் சந்தேகங்கள் இரகசிய தரவுகளின் கசிவுகளால் வெளிக்கிழம்பியது.

குறித்த சமகாலத்தில் சிறிலங்கா அரசு அமெரிக்காவின் 'சோபா' (SOFA) மற்றும் 'மிலேனியம் சேலஞ்ச்' (MCC) போன்ற உடன்படிக்கைகளை நோக்கி தன்னை நகர்ந்துகொண்டிருந்தது.

இது பிராந்தியத்தில் அந்த அயல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தலையீடு போன்றவற்றில் பெரும் சவாலாக அமையும் என அதன் உயர்பீடம் கருதியது.

எனவே அமெரிக்கச் சார்பு அரசாங்கத்தை வீழ்த்தி, தமக்கு இணக்கமான ஒரு தேசியவாத ஆட்சியை இலங்கையில் நிலைநிறுத்த நினைத்த போது அதற்கு ராஜபக்சக்களின் அதிகாரப் பசியை அந்த நாடு தனது நலனுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற பலமான சந்தேகம் இப்போது அரசியலாளர்களை ஆட்கொண்டிருக்கிறது.

யாழ் பல்கலையில் தையிட்டியை முன்னிறுத்திய ஒரு கலந்துரையாடல்!

யாழ் பல்கலையில் தையிட்டியை முன்னிறுத்திய ஒரு கலந்துரையாடல்!

பாதுகாப்பில் உள்ள ஒரு 'உயிருள்ள சாட்சி'

ஒரு அரசாங்கத்தையே உலுக்கிப்போட்ட இந்த கொடூரமான சதி நடவடிக்கையில் மிக முக்கியமான ஒருவராக பயன்படுத்தப்பட்ட சாரா ஜஸ்மின் என அறியப்பட்ட (புலஸ்தினி ராஜேந்திரன்) குண்டுவெடிப்பின் பின் கடல் மார்க்கமாக அண்டை நாடொன்றிற்கு தப்பிச் சென்றதாகவும், தற்போது அவர் அந்த நாட்டின் உலகளாவிய செல்வாக்கு மிக்க புலனாய்வுப் பிரிவின் நேரடிப் பாதுகாப்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூட அடிக்கடி சில தகவல்கள் உலாவருகின்றன.

இந்த குற்றச்சாட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூட அரசல் புரசலாக பேசப்பட்டுள்ளது. சாரா ஜஸ்மின் இலங்கை அதிகாரிகளிடம் அகப்பட்டால் அது இந்த சதி நடவடிக்கையில் சுரேஷ் சாலே, ராஜபக்சக்கள் மற்றும் அந்த அயல்நாட்டின் முக்கோணத் தொடர்புகள் சர்வதேச அரங்கில் அம்பலப்பட்டு விடும் எனவும் எனவேதான் அவர் திட்டமிட்டே மறைத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் கருத்துக்கள் சந்தேகங்களாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம் | 2019 Easter Attack In Sl Suresh Sallay Arrested

இரு நாடுகளின் நலன்களும் பலியான அப்பாவி உயிர்களும் குறிப்பிட்டு சுருக்கமாகச் சொன்னால், சுரேஷ் சலே என்பவர் சமகாலத்தில் அதாவது ஒரு நேரத்திலையே இரண்டு முதலாளிகளுக்கு ஏவல் புரிந்த ஒரு 'இரட்டை முகவர்' (Double Agent). எனக்கொள்ளமுடியும்.

ஒருபுறம் ராஜபக்சக்களின் அதிகார மீட்ப்புக்கான களப்பணிகளைச் செய்த அவர், மறுபுறம் மேற்சொன்ன அயல்நாட்டின் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாக்க ஒரு 'கருவியாகச்' செயற்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பின் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்துன் பெயரில் கைது செய்யப்பட்ட ஒரு அயல்நாட்டு பிரஜையை எவ்வித விசாரணையுமின்றி அந்த நாட்டின் புலனாய்வாளர்களிடமே சுரேஸ் சலே கவனமாக கையளித்தார் என்ற குற்றச்சாட்டு, இந்த இருதரப்புகளுக்கிடையிலான இரகசிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது.

எனவேதான் 269 அப்பாவி உயிர்களைப் பலிகொடுத்து தமது சுய லாபங்களுக்காக அரங்கேற்றப்பட்ட இந்த 'அரசியல் நாடகத்தின்' சூத்திரதாரிகள் அனைவரும் பாகுபாடின்றி சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது ஒன்றே. இப்போதைக்கு காலத்தின் தேவையும் அப்பாவிகளாகக் கொல்லப்பட்ட மனிதர்களுக்கான நீதியுமாகும்......

சுரேஸ் சாலே - சதிக்கோட்பாட்டு CO! சாலேக்கு 3 மாத காவல் வருமா..

சுரேஸ் சாலே - சதிக்கோட்பாட்டு CO! சாலேக்கு 3 மாத காவல் வருமா..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016