அதிகரிக்கப்படுமா மின்சார கட்டணம் - அமைச்சரவை கூட்டத்தில் நாளை இறுதி தீர்மானம்
Ranil Wickremesinghe
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
By Dharu
நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.
மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கா முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம் குறித்த தீர்மானம் எட்டப்படவுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த பின்னணியில் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
எனினும் அன்றைய தினம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நாளைய அமைச்சரவை கூட்டம் வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி