ஈஸ்டர் ஞாயிறு இறுதி அறிக்கை தொடர்பில் அரசாங்கம் பச்சைக் கொடி!
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் பொதுமக்களுக்கு முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் இதன்போது பல உடன்பாடுகளை எட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இறுதி அறிக்கை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையை, ஜனாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான இறுதி அறிக்கையை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட ஜனாதிபதியிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் மிகவும் நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. ஆணைக்குழு அறிக்கை மற்றும் இறுதி அறிக்கையை விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி - கொழும்பு வீதியில் சரிந்து விழுந்த பாறைகள்! ஒருவர் பலி - இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள பலர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |