சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : வெளியான தகவல்
Mahindananda Aluthgamage
Sri Lanka
Accident
Highways In Sri Lanka
Sanath Nishantha
By Eunice Ruth
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
அவரது பூதவுடல் இன்று மாலை 5.30 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விபத்து
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் இன்று(25) அதிகாலை உயிரிழந்தனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது எதிர்பாராத மரணம் தொடர்பில் அரசியல் தரப்பினர், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி