பிரித்தானியாவில் புதிய பிரதமர் பதவிக்கு இறுதி வேட்பாளர்கள் தெரிவு
Boris Johnson
United Kingdom
By Vanan
இறுதி வேட்பாளர்கள் தெரிவு
பிரித்தானியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான இரு வேட்பாளர்களை இறுதிப்படுத்தும் முக்கிய நகர்வு இன்று இடம்பெற்றது.
இறுதியாக இடம்பெற்ற டோரி தலைமைத்துவ வாக்கெடுப்பில் பென்னி மோர்டான்ட் வெளியேற்றப்பட்ட பின்னர், அடுத்த பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸை முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் எதிர்கொள்கின்றார்.
டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடந்த இறுதி வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ், மோர்டான்ட்டின் குறுகிய முன்னிலையை முறியடித்து, 105க்கு - 113 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இறுதி வாக்கெடுப்பு
இறுதி வாக்கெடுப்பில் 137 வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்த சுனக்குடன் அவர் இப்போது நேருக்கு நேர் மோதவுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்