சர்சைக்குள்ளாகும் பிரதி அமைச்சர்: நிதி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெருமவை நிகழ்நிலையில் வணிகத்திற்கான விளம்பர நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நிதி அமைச்சு கண்டித்துள்ளது.
பிரதி அமைச்சர் ஹர்ஷண, நிகழ்நிலை வணிக நிறுவனமான TTK அப்ளிகேஷன் ப்ரோமோஷன் லிமிடெட்டை ஆதரிப்பதாகக் கூறும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, குறித்த நிறுவனத்துடன், எந்த கூட்டங்களிலே அல்லது கலந்துரையாடலிலோ பங்கேற்கவில்லை என்பதையும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
மேலும், TTK அப்ளிகேஷன் ப்ரோமோஷன் லிமிடெட் நிறுவனம் பிரதி அமைச்சரின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறனதொரு பின்னணியில், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |