போதகர் ஜெரோம் சொத்துக்கள் வாங்கி குவித்தது எப்படி -ஆரம்பமானது விசாரணை
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சொத்துக்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது தொடர்பில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கட்டுநாயக்க வயங்கொட வீதியிலுள்ள மினரல் டோம் எனப்படும் இந்த போதகர் விரிவுரை ஆற்றும் சமய நிலையத்தின் மொத்த பெறுமதி சுமார் 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த 12 வீடுகள்
கட்டிடம் அமைந்துள்ள 4 ஏக்கர் நிலம், கவுன்சில் உறுப்பினர்களான தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியால் வழங்கப்பட்டுள்ளது. மவுண்ட் மற்றும் ஹெவ்லாக் சிட்டி சூப்பர் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள விலை உயர்ந்த 12 வீடுகள் போதகர் குடும்பத்தினரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தேவாலய நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கல் ஒன்று ஐந்து இலட்சத்திற்கு வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு கிடைத்த பணம் துபாய், கட்டார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கணக்குகளில் Undial முறையில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
