வவுனியாவில் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம் (படங்கள்)
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டார்சைக்கிள் திருத்தும் நிலையம் மீது ஏற்பட்ட தீயும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
புதுவருட தினமான இன்று (01) இடம்பெற்ற இந்த அனர்த்தம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திடீரென தீ பிடித்த மோட்டார் சைக்கிள்
பிளசர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இயங்கவில்லை எனத் தெரிவித்து வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் திருத்துமிடம் ஒன்றின் முன்பாக குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதனை இயங்கச் செய்த போது அம் மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
தீப் பிடித்த மோட்டார்சைக்கிளில் இருந்து மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்கும் தீ பற்றிய நிலையில் அங்கு நின்றவர்கள் அதனை கட்டுப்படுத்தியதுடன், தீப்பிடித்த மோட்டார் சைக்கிளை வீதியில் இழுத்துப் போட்டனர்.
அத்துடன் அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்கள் இணைந்து நீர் ஊற்றியும், மண் போட்டும் மோட்டார் சைக்கிள் மீதான தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை.
மோட்டார் சைக்கிள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
