திடீரென பற்றியெரிந்த வாகனம் - கொழும்பில் நடந்த சம்பவம்
Colombo
Accident
By pavan
கொழும்பு - காலி வீதியில் கல்கிஸ்ஸ பகுதியில் மகிழுந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மகிழுந்தில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளதாகவும், அவர்கள் மகிழுந்தில் இருந்து குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம்
விபத்தில் மகிழுந்து முற்றாக எரிந்துள்ளதுடன், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தீயிணை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மவுண்ட் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்