யாழில் தீ விபத்து - மாணவி பலி!!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kanna
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியிலுள்ள மக்களால் சிறுமி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி