களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீப்பரவல்!
Kalutara
Power Cut Today
Fire
By Sathangani
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (13) காலை 8.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் குறித்த கட்டமைப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறித்த சம்பவத்தின் பின்னர் களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்