மலையகத்தில் லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் : நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்
ஹட்டனில் (Hatton) பாரிய தீப்பரவரல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (03) இரவு ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான KM பிரிவில் உள்ள தோட்ட தொடர் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த தீயினால் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் உடமைகள்
எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், பரவிவரும் தீயைக் தோட்டத் பொதுமக்களும் ஹட்டன் காவல்துறையினரும் இனைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
அத்தோடு, இந்த தீ விபத்து காரணமாக 12 வீடுகள் முலுமையாகவும் 14 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளமையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் ஹட்டன் செனன் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
