ஹோமாகம இரசாயன களஞ்சியசாலை விபத்து - தீ அணைக்கப்பட்டுள்ளது
ஹோமாகம கட்டுவன பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.
நிறப்பூச்சு(பெயின்ட்) தொழிற்சாலையும் ஆடை தொழிற்சாலையுமே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்றிரவு (17) ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஹொரணை மற்றும் கோட்டே தீயணைப்புப் பிரிவுகளில் இருந்து 07 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், பனாகொட இராணுவ முகாம் தீயணைப்புப் பிரிவின் வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.
இராணுவ உதவிகள்
தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக இராணுவக் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று(17) பிற்பகல் ஹகுரன்கெத்த நாரங்கமடில்லா பகுதியில் தீ பரவியதாகவும், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதோடு, உப்புவெளி வெல்கம்வெஹர வனப்பகுதியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.