மலையகத்தில் தீக்கிரையான தேயிலை தொழிற்சாலை
மஸ்கெலியாவில் (Maskeliya) தேயிலை தொழிற்சாலையொன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் நல்லதண்ணி லக்ஸபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
பெருந்தொகை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பெருந்தொகையான தேயிலை அழிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேயிலை தூள் உற்பத்திப் பகுதியில் ஏற்பட்ட தீ, தேயிலை கொழுந்து சேமிக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கு பரவி பொதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருந்த தேயிலை தூளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலை
இதையடுத்து பரவத் தொடங்கிய தீ, தேயிலை தொழிற்சாலையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தோட்டத் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் அத்தோடு தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பதுடன் தீ விபத்து குறித்து நல்லதண்ணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
