நிதி அமைச்சு கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து!
Sri Lanka
Accident
By pavan
கொழும்பில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டடத்தின் 2ஆம் மாடியில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி