பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ!
கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தொன்று இன்று (16.11.2025) காலை கல்குளம் பிரதேசத்தில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.
அதன்படி, குறித்த பேருந்து எரிந்து நாசமாகியுள்ளதாக கவரக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் உள்ள கல்குளம் கட்டுமான இயந்திர கல்லூரிக்கு முன்னால் குறித்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையினரும் அனுராதபுரம் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பேருந்தில் 11 பேர் பயணித்துள்ள நிலையில் தீ விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |