கல்கிசை நீதிமன்றில் நடந்த சம்பவம்! அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறைக்கைதி
நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய வந்த ஒரு கைதி, நீதிமன்ற வழக்கு கோப்பிலிருந்து 9 மிமீ தோட்ட இல்லாத துப்பாக்கியை திருடிச் சென்றுள்ளார்.
மூன்று கைதிகள் சிரமதானத்திற்காக வந்ததாகவும், அவர்களில் ஒருவர் இந்த துப்பாக்கியைத் திருடிச் சென்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், சிரமதானத்தை முடித்துக்கொண்டு, சிறைச்சாலைக்குச் செல்வதற்காக கைதிகள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்போது, சிறைச்சாலைப் பேருந்தில் இருந்த சிறை அதிகாரிகள், மேற்கூறிய நபர் ஒரு பார்சலை எடுத்துச் செல்வதைக் கவனித்துள்ளனர், அதைச் சோதித்தபோது, மேற்கூறிய துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாாக்கியை கண்டுபிடித்த பின்னர் சிறைச்சாலைப் பேருந்து நீதிமன்றத்திற்குத் திரும்பிச் சென்று நீதிமன்றத்தின் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்