இனம்தெரியாதோரால் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Shooting
Death
By Kiruththikan
உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை பனாமுர கெம்பனே பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ராஜா தயானந்த என்ற 50 வயது நபர் தனது பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
கெம்பனே அலுத் வீதி பகுதியில் பாழடைந்த இரண்டு வீடுகளுக்கு அருகிலுள்ள வளைவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பனாமுர காவல்துறையினர், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்