கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியை வெளிப்படுத்திய ட்ரம்ப்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ப்பு புவியல் அரசியல் செயற்பாட்டின் 'ரெஜிம்'மாற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 'ரெஜிம்' மாற்றம் 2009 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொட்டுக்கட்சி தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கு உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியை கைப்பறிய போது USAID, (United States Agency for International Development)தெற்காசியாவில் ஆட்சி கவிழ்ப்புக்காக செலவழித்த தொகையை வெளியிட்டதில் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ரெஜிம் மாற்றம்
இது தொடர்பில் மொட்டுத்தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களின்படி, 2009 ஆம் ஆண்டே இந்த ரெஜிம் மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரல் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
இதன்படி 2010 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அப்போதைய இராணுவத் தளபதியை எமது தரப்பில் இருந்து வெளியில் எடுத்தார்கள்.
அதன் அடுத்த செயற்பாடாக எமது கட்சியில் இருந்த பொதுச் செயலாளரை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கினார். அதன் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ப்பாகும்.
கோட்டாபய அட்சியின் போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பங்களாதேஷின் ஆட்சி கவிழ்ப்பின் போது அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கவில்லை. பங்களாதேஷ் எமக்கும் கோவிட் தொற்றில் கடன் கொடுத்த நாடு.
ரணில் ஆட்சி
இன்று சேக் ஹஷினாவுக்கு நாட்டுக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. ஆனால் கோட்டாபய நாட்டுக்கு வந்தார்.
சர்வாதிகார நாடுகளுக்கு அடிபணியாத நாடுகளில் இவ்வாறான ரெஜிம் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆட்சியை ஏற்றுக் கொண்டு காலத்தில் புத்தாண்டுக்கு விநியோகித்த எரிபொருள் விகிதத்திற்கும் அதிகமாக கோவிட் காலத்தில் விநியோகித்தார்.
ஆனால் வரிசைகள் உருவாக்கப்பட்டன இவையும் ஆட்சி மாற்றத்திற்கானதாகும். கோட்டபாய காலத்தில் எமது அரச இயந்தியரம் முறையாக இயங்கவில்லை.
அத்தோடு சமூகத்தின் மனநிலையை எம்மால் அறிந்து கொள்வதற்கான சூழல் இருக்கவில்லை. மேலும் எமது விநியோக சங்கிலி விழந்ததும் முக்கிய காரணமாகும்” என மொட்டுத்தரப்பு வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
