பௌத்தமயமாக்களின் அடுத்தக்கட்டம்! வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு பாரிய சவால்
வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அரசிதழில் வெளியிட்டு அவற்றை வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய வேண்டும் என, அமரபுர மகா சங்க சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமரபுர மகா சங்க சபாவின் பொதுச்செயலாளர் வண. பலபிட்டியே சிறி சீவலி தேரர்,
''இன்று வடக்கு , கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலங்கள், பௌத்த சிதைவுகள், மடங்கள் மற்றும் கல்வெட்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்கால பாதுகாப்பு
பல்வேறு இனக்குழுக்கள் அவற்றைப் பாதுகாக்க அனுமதிக்கவில்லை. வடக்கு, கிழக்கில் உள்ள வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் போது, மகா சங்கத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
அந்த முயற்சியில் சிலர் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
எனவே, நகரங்களில் உள்ளதைப் போலவே வடக்கு , கிழக்கில் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு, வழிபாட்டுத் தலங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
எதிர்காலத்திற்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பலபிட்டியே சிறி சீவலி தேரர் வலியுறுத்தியுள்ளார்”
பிரிவினைவாத அரசியல்
தற்போது நாட்டில் பிரிவினைவாத அரசியலுக்கு இடமில்லை என கருத்து வெளியிட்டு வரும் அரசாங்கம், வடக்கு கிழக்கில் தமிழ்ர்களின் தொன்மைகளை பாதுகாக்கவேண்டிய கடமை காணப்படுகிறது.
தையிட்டி, குருந்தூர்மலை, உகந்தை மலை போன்ற இடங்களில் தமிழர்களின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் செய்யப்படுவதான சர்ச்சைகள் இன்றளவும் தொடர்கிறது.
இவ்வாறான பின்னணியில் வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த தளங்கள், வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மேலும் வடக்கு கிழக்கு தமிழர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிருப்தியையும் அரசாங்கத்தின் மீது தோற்றுவிக்கும் என சமூக ஆர்வளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
