இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

Parliament of Sri Lanka Political Development Current Political Scenario
By Sathangani Aug 04, 2026 03:59 AM GMT
Report

புதிய இணைப்பு

இன்றைய (04.08.2026) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கம் 10.00 முதல் 11.00 வரை  வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.30 முதல் 5.00 வரை 2026 இன் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு இடம்பெறவுள்ளதுடன் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.

5.00 முதல் 5.30 வரை அரசாங்கத்தின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு

ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற வாரம் இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைநிரப்பு மதிப்பீட்டு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை (05) அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்

எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை

வியாழக்கிழமையன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் | First Parliamentary Week Of August Begins Today

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 7 தனிநபர் உறுப்பினர் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றைக் கையளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு

இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு

எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவினர் குறித்த முன்மொழிவில் நேற்று (03) கையொப்பமிட்டுள்ளதுடன், அதற்கு எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் | First Parliamentary Week Of August Begins Today

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது, சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காகவே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி - கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்

கண்டி - கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026