2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!
Colombo
Sri Lanka
By Harrish
இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு(Colombo) துறைமுகத்தை வந்தடைந்தது.
ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இன்று(02) வருகை தந்துள்ளது.
குறித்த கப்பலானது 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் பிரவேசித்துள்ளது.
அதிசொகுசு பயணிகள் கப்பல்
இதன்போது, நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
மேலும், எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் இன்றிரவு(02) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்