நாய்களுடன் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டது
பலாங்கொடை நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியுடன் சேர்த்து இரண்டு நாய்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் பாரவூர்தி மற்றும் சாரதியை கைது செய்தனர்.
பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றிற்கு அருகில் பாரவூர்தியை நிறுத்தி அரிசி மூடைகளை இறக்க முற்பட்ட போது, பாரவூர்தியில் அரிசி மூடைகளுக்கு இடையில் இரண்டு நாய்கள் இருப்பதை கண்ட நபர் ஒருவர் அதனை தனது கைத்தொலைபேசியில் காணொளி எடுத்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதிகாரிகள் மேலதிக விசாரணை
அதன்படி பாரவூர்தியை கைப்பற்றிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
இந்த பாரவூர்தியில் இருபத்தி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்கப்படும் கச்சா அரிசி கையிருப்பு இருந்ததாகவும், இந்த பாரவூர்தி திஸ்ஸமஹாராமவில் உள்ள அரிசி ஆலைக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |