முதல் பெண் வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்பும் சவுதி..!
சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு 'விஷன் 2030' என்ற விண்வெளி திட்டத்தை ஆரம்பித்தது.
இதில் குறுகிய,நீண்ட விண்வெளி பயணங்களுக்கான வீரர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது.
ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணம்
இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் அரபு நாடு என்ற பெருமையை பெற்றது.
இந்த நிலையில் விண்வெளிக்கு முதல் முறையாக பெண் வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது.
.@NASA and its international partners have approved the crew for @Axiom_Space’s second private astronaut mission to the space station, Axiom Mission 2 (Ax-2), targeted to launch in spring 2023. https://t.co/ZhCnsDAlXf
— International Space Station (@Space_Station) February 13, 2023
சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான ரயானா பர்னாவி, மற்றும்
சக நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல்கர்னி உள்பட 4 பேர் ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணத்தில்
இணைய உள்ளதாக சவுதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.