நாட்டில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்!
இலங்கை, தனது முதலாவது ஸ்மார்ட் ருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless Cards), டிஜிட்டல் பணப்பைகள் (Digital Wallets) மற்றும் QR குறியீடுகள் மூலம் பயணக் கட்டணங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் செலுத்த முடியும்.
இந்த முன்னேற்றம், ஸ்மார்ட் மோபிலிட்டி (Smart Mobility) துறையில் உலகளாவிய முன்னணி நாடுகளின் வரிசையில் இலங்கையையும் இணைக்கிறது.
போக்குவரத்து கொடுப்பனவு
இலங்கையின் முதலாவது திறந்தநிலை போக்குவரத்து கொடுப்பனவு (Open-Loop Transit Payment) முறைமையின் தொழில்நுட்பம், மென்பொருள், வன்பொருள் மற்றும் செயல்பாட்டு பங்காளிகளாக Ceylon Business Appliances (CBA) மற்றும் Nimbus Ventures செயல்பட்டுள்ளன.
இலங்கை அரசு மற்றும் முன்னணி வங்கி பங்காளர்களின் ஒத்துழைப்புடன் இந்த தேசிய முயற்சி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் CBA முன்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறது.

அத்தோடு, நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் CBA முக்கிய பங்காற்றியுள்ளது.
Nimbus Ventures மற்றும் CBA உருவாக்கிய வலுவான மென்பொருள் தீர்வுடன் இணைந்து, இந்த பயணச்சீட்டு செயலி PAX A910S பயணச்சீட்டு இயந்திரத்துடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக, உயர்ந்த நம்பகத்தன்மை மற்றும் விரிவாக்கத் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய டிஜிட்டல் சாதனையை நனவாக்குவதற்காக அயராது உழைத்த பொறியியல், மென்பொருள் மேம்பாடு, பயனர் அனுபவ வடிவமைப்பு (UX), செயல்பாடுகள் மற்றும் களச்செயல்பாட்டுக் குழுக்களுக்கும் CBA தனது விசேட நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |