ட்ரம்ப் கையை விட்டு நழுவும் அமெரிக்கா - சொந்த மாநிலத்திலேயே விழுந்த பேரிடி!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான பரந்த வரிகளை சட்டப்பூர்வமாக எதிர்த்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதன்படி, ட்ரம்பின் வரிகளுக்கு எதிராக போராடிய முதல் மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளதுடன், வரிகளை விதிப்பதில் ட்ரம்ப் தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறியதாக ஆளுநர் கவின் நியூசம் நிர்வாகம் வாதிடுகிறது.
சான் பிரான்சிஸ்கோவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆளுநர் நியூசம் மற்றும் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா ஆகியோர், ட்ரம்பின் நடவடிக்கைகள் கலிபோர்னியாவிற்கும் பரந்த அமெரிக்க பொருளாதாரத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ட்ர்மபின் அதிகார துஷ்பிரயோகம்
அத்தோடு, காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் வரிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.
No other state will be more impacted by the impacts of the toxic uncertainty of these tariffs.
— Governor Newsom Press Office (@GovPressOffice) April 16, 2025
California is the largest hunting, fishing, agriculture, forestry state in this nation.
When folks talk about the impacts to rural economies — you’re talking about California.
—… pic.twitter.com/QBnXYxCgYa
"ஜனாதிபதி ட்ரம்பின் சட்டவிரோத வரிகள் கலிபோர்னியா குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் நமது பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன, விலைகளை உயர்த்தி வேலைகளை அச்சுறுத்துகின்றன" என்று நியூசம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும், ஒவ்வொரு அமெரிக்க மாநிலத்தையும் பெரும்பாலான நாடுகளையும் விஞ்சி, அமெரிக்காவில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் மிகப்பெரிய பங்குகளைக் கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகை எதிர்ப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், கலிபோர்னியா ஆளுநர் நியூசமினால் தொடரப்பட்ட மேற்கண்ட வழக்கிற்கு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"கலிபோர்னியாவின் பரவலான குற்றம், வீடற்ற தன்மை மற்றும் கட்டுப்படியாகாத தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நமது நாட்டின் தொடர்ச்சியான பொருட்கள் வர்த்தக பற்றாக்குறையின் தேசிய அவசரநிலையை இறுதியாக நிவர்த்தி செய்வதற்கான ஜனாதிபதி ட்ரம்பின் வரலாற்று முயற்சிகளைத் தடுக்க கவின் நியூசம் தனது நேரத்தை செலவிடுகிறார்," என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
