அடுத்த அதிரடிக்கு தயாரான ட்ரம்ப் : 30 நாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு விழுந்த பேரிடி
30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நடவடிக்கை எடுத்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க (United States) அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்கா (Africa) மற்றும் ஆசியாவில் உள்ள சில தூதரகங்களும் இதில் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி
சோமாலியா, ஈராக், மோல்டா (Malta), லக்சம்பர்க் (Luxembourg), கொங்கோ, மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட சில நாடுகளும் குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
மேலும், பிரான்சில் அமெரிக்காவுக்கான ஐந்து தூதரகங்கள் உள்ள நிலையில், அவற்றையும் மூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜேர்மன் மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்கள், பிரித்தானியாவில் உள்ள ஒரு தூதரகம் ஆகியவற்றையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட தூதரகங்களின் பணிகளை அண்டை நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
