நாட்டில் மீன் விற்பனையில் பாரிய வீழ்ச்சி: வெளியான காரணம்
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Sri Lanka Fisherman
Fish Price In Srilanka
By Laksi
நாட்டில் மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன் விலை வீழ்ச்சியினால் கடற்றொழிலாளர்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், அநேகமான மக்கள் உணவு கொள்வனவினை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாட்டில் மீன் விற்பனையில் பாரியளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 5 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்