இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல்

Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Shadhu Shanker Aug 03, 2024 04:24 AM GMT
Report

இலங்கை கடற்படையினர்(Sri lankan Navy) உள்ளாடைகளுடன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று உணவு கூட கொடுக்காமல் பல மணி நேரம் விசாரித்து பின்னர் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக உயிர் பிழைத்த இந்திய கடற்றொழிலாளர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை(31) கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியுள்ளது.

இதில் படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற கடற்றொழிலாளர் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற கடலில் கடற்றொழிலாளர் மாயமாகி உள்ளார்.

நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை கடற்றொழிலாளரை மீட்ட நாகை கடற்றொழிலாளர்கள்

நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை கடற்றொழிலாளரை மீட்ட நாகை கடற்றொழிலாளர்கள்

ரோந்து படகு

இந்நிலையில், படகு மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளர் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் கடல் வழியாக இன்று (3) அதிகாலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல் | Fisherman S Body Recovered Near Rameswaram

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டமுத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள் வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

 சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்

மேலும் இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய கடற்றொழிலாளர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை உலங்கு வானூர்தியில், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல் | Fisherman S Body Recovered Near Rameswaram

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.

அனுப்பி வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர்.

பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை கடற்படை

உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு எடுத்து வந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: இந்திய கடற்றொழிலாளர் பரபரப்பு தகவல் | Fisherman S Body Recovered Near Rameswaram

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மலைச்சாமியின் உடல் நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

இதேவேளை, நடுக்கடலில் திடீரென வந்த இலங்கை கடற்படை ரோந்து படகு மீன்பிடி படகின் மீது மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும், படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த கடற்றொழிலாளர் தெரிவித்தார்.

மேலும் தங்களை இலங்கை கடற்படை உள்ளாடைகளுடன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று உணவு கூட கொடுக்காமல் பல மணி நேரம் விசாரித்து பின்னர் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக உயிர் பிழைத்து கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டிய உயிர் தப்பி வந்த கடற்றொழிலாளர்கள் யாழ்பாணத்தில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி தங்களை பத்திரமாக தாயகம் அனுப்பி வைத்ததாக கடற்றொழிலாளர்கள் இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி