சட்டவிரோத மீன்பிடியால் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி இடம்பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்ற பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான சிறிய மீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
அத்துடன் குறித்த மீனினங்கள் இறந்த நிலையில் மீண்டும் கடலில் கொட்டப்படுவதனால் தற்போது சிறு மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறிலங்கா கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி, இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
