அயலகத் தமிழர் விழாவில் கடற்றொழிலாளர்களின் நலனும் அவசியம்!
அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் வடக்கு பகுதி கடற்றொழிலாளர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும் என மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (13.01.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அயலக தமிழர் தினம்
''தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தினம் என்ற நிகழ்வு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் விமர்சையாக நடைபெற்றிருக்கின்றது.

இலங்கையில் இருந்து அதற்கான பிரதிநிதிகள் சென்றிருக்கின்றார்கள் பல விடயங்கள் குறிப்பாக தமிழால் இணைகின்ற பல விடையங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது.
இது காலத்தின் தேவையாகும்,உண்மையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தான் தமிழ் என்ற உணர்வையும் தமிழோடு இணைய வேண்டும் என்ற அந்த ஆசையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.
உண்மையில் இரு நாட்டை நாங்கள் எடுத்துக் கொண்டால் தமிழால் இணைவோம் என்பதற்கு பொருத்தமான நாடாக தமிழகத்துக்கும் வடபகுதிக்கும் நிறைய உறவு இருக்கிறது.
இலங்கைக்கான உறவு
குறிப்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு தமிழால் இணையக் கூடிய வகையில் எந்த நாடுகளும் இல்லை.இலங்கைக்கு தான் அந்த வார்த்தை பொருத்தமானது.
எனவே நான் கூற வருகின்ற விடயம் இந்த தமிழால் இணைவோம் என்பது வார்த்தை. உண்மையில் பாராட்ட கூடியதாக இருந்தாலும் தமிழால் நாங்கள் இணைந் திருக்கின்றோமா?
தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்களுக்கும் இலங்கை வடக்கு பகுதியில் இருக்கும் தமிழர்களுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த உறவு ரீதியாக இது ஒரு அரசியலுக்கும் மொழிக்குமானது அல்ல.
அதையும் தாண்டி வாழ்வாதாரம் ஒன்றிணைவு அவர்களின் குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஊடாக பார்க்கப்பட வேண்டியதொன்றாகும்.
இருந்த போதும் இங்கு நடைபெறுகின்ற விடயம் தமிழக கடற்றொழிலாளர்கள் மற்றும் வடபகுதியில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |